கோடை கால உணவுகள் பகுதி - 8
கோடை கால உணவுகள் பகுதி - 8 பதநீர் * பனை மரத்தின் உச்சி கிளையில் இருந்து வடியும் சாற்றை பானைகளில் சேகரிப்பது பதநீராகும். * அதிகாலையில் சேகரிக்கப்படும் நீர் குடிப்பதற்கு ஏற்றதாகும். பதநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: * உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. * கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வை நீக்குகிறது. * மலச்சிக்கலை சீராக்குகிறது. * பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி , ஈறுகளில் இரத்த கசிவை தடுக்கும். * பதநீரில் உள்ள இரும்புச்சத்து பித்தத்தை குறைத்து, இரத்த சோகையை விரட்டும்.