மார்கழியின் சிறப்புகள் - நாள் 1
மார்கழியின் சிறப்புகள் நாள் 1 தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதம் மார்கழி. குளிர் காலத்தின் ஆரம்பம் மார்கழி. இந்த மார்கழியில் சூரியனுடைய இயக்கம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் மாதமாகும். இந்த சூரியனின் ஓட்டத்தில் மாற்றம் நிகழும் பொழுது வெப்ப நிலையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி. ஸ்ரீகிருஷ்ணனே மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கீதையில் மார்கழி மாதத்தை தேவ மாதம் என்றும் குறிப்பிடுகிறார்கள். பீடு நிறைந்த மாதம் மார்கழி. மார்கழி மாதம் முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாக கொண்டாள். மார்கழியில் ஆலயங்களில் விடியற்காலையிலேயே வழிபாடுகள் தொடங்கிவிடும். திருப்பள்ளிஎழுச்சி பூஜைகளும் விடியற்காலையிலேயே தொடங்கிவிடும். சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கிய விசேஷங்களில் ஒன்று. மார்கழி மாதத்தில் ...