உலக இருதய தினம் 29 செப்டம்பர், 2022
உலக இருதய தினம் 29 செப்டம்பர், 2022 உலகளவில் இதய நோய்கள் அதிக மரணம் நேர்வதற்கான காரணமாக இருக்கிறது. 18.6 மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் இதய நோய்களால் இறக்கிறார்கள். 85 சதவீத இதயநோய்கள் இதய அடைப்பினாலும், பக்கவாதத்தினாலும் ஏற்படுகிறது. உலக இதய நிறுவனம், உலக நல நிறுவனத்துடன் சேர்ந்து உலக இதய தினத்தை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி கடைபிடிக்க செய்கிறது. இந்த தினம் இதய நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதய நோயின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் உங்கள் இதயங்களை பயன்படுத்துங்கள் - மக்களுக்காக, இயற்கைக்காக, உங்களுக்காக ஒவ்வொரு இதயத்திற்கும் : இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சிந்தனை செய்யுங்கள் உலக இதய தினம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பாகும். எப்படி சிறந்ததாக தங்களின் இதயத்தை மக்களுக்காகவும், இயற்கைக்காகவும் தங்களுக்காகவும் ...