கீரைகளும் அதன் பலன்களும் - 10 - சிறு கீரை
கீரைகளும் அதன் பலன்களும் - 10 சிறு கீரை சிறு கீரை ஒரு மருத்துவ குணங்களை கொண்ட கீரை வகையாகும். சிறு கீரையை நம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். சிறு கீரையை பொரியல், கூட்டு , குழம்பு, அல்லது சாதமாக சமைத்து சாப்பிடலாம். சிறு கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம். மலச்சிக்கல் சிறுகீரை அதிக நார்ச்சத்து உடையது. இதனால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக உதவுகிறது. தீவிர மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் உதவுகிறது. வாரம் ஒருமுறை சிறுகீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும். கல்லீரல் வாரத்திற்கு இரண்டு முறை சிறு கீரையை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகும். ஊட்டச்சத்து ...