Posts

Showing posts from August, 2022

விளாம்பழம்

Image
விளாம்பழம்       விளாம்பழம் மிக விலை குறைவாக கிடைக்கக்கூடிய அதீத மருத்துவ குணங்களை கொண்ட பழமாகும். அகத்தியர் மருத்துவம் இதனை முதன்மை பழம் என குறிப்பிடுகிறது.  விளாம்பழம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகமாக கிடைக்கும்.     விளாம்பழத்தின் ஓட்டை நீக்கி உள்ளிருக்கும் விழுதுகளை நாட்டு சர்க்கரையுடன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த பழம் புளிப்பும், இனிப்பும் கலந்த  சுவை உடையது. நல்ல பழுத்த விளம்பழங்களையே சாப்பிட வேண்டும்.      விளாம்பழத்தை பயன்படுத்தி ஜாம், ஜூஸ் மற்றும் ரசம் தயாரிக்கலாம்.  மருத்துவ பலன்கள்  1. விளாம்பழத்தை சாப்பிடுவதால் வாதம், பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களும் குணமாகும். 2. அதிக அளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்து உள்ளதால் எலும்புகளை வலுவாக்கும். 3. செரிமான கோளாறுகளை சரிசெய்து பசியை தூண்டவும் விளாம்பழம் உதவுகிறது. 4. நரம்பு தளர்ச்சியை குணப்படுத்த உதவும். 5. வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் நோய்கள் வராமல் பாதுகாக்க உதவும். 6. ஞாபக சக்தியை அதிகரிக்கும். 7. இதயத்தை பலப்படுத்தும். 8. மலச்ச...

SPICE OF THE WEEK - CARDAMOM

Image
 SPICE OF THE WEEK CARDAMOM     Cardamom is a spice, with an intense slightly sweet flavor used as seed, oil and extract. It is originated from India now available worldwide and used in sweet and savory dishes. cardamom have been used in traditional medicine for centuries. HEALTH BENEFITS OF CARDAMOM  1. Anti -oxidant and Diuretic properties of cardamom helps to lower blood pressure level. 2. Cardamom powder helps to fight cancer. 3. Cardamom powder decrease liver inflammation induced by diet high in carbohydrate and fat 4.  Helps in digestion, relives stomach discomfort, nausea and vomiting 5. Cardamom used to treat bad breath  6. It has anti-bacterial properties fights against infection 7. Cardamom may increase airflow to the lungs and improves breathing. 8. Cardamom powder may lower blood sugar levels 9. Cardamom extract helps to reduce anxiety. 10. Cardamom extract reduces the risk of fatty liver diseases.  

உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் -2

Image
   உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் பசலைக் கீரை பழச்சாறு  தேவையான பொருட்கள்  பசலைக் கீரை  - 100 கிராம்  பச்சை திராட்சை - 30 எண்கள்  வெள்ளரிக்காய்  - 50 கிராம்  துளசி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்  புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு  எலுமிச்சை சாறு - ஒரு எலுமிச்சை பழத்தில் இருந்து எடுத்தது. செய்முறை  1. பசலைக் கீரை, புதினா இலைகளை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். 2. பச்சை திராட்சையை நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்  3. வெள்ளரிக்காய் நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். 4. பின்னர் மிக்ஸியில் பசலைக்கீரை, புதினா இலைகள், பச்சை திராட்சை, வெள்ளரிக்காய் துண்டுகள், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். 5. பருக கொடுக்கும் பொழுது துளசி விதைகளை சேர்த்து கலக்கி கொடுக்கவும். ஐஸ் கட்டிகள் சேர்க்க கூடாது.  பலன்கள் : 1. அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. 2. நார்ச்சத்து அதிகம் இருப்பதால்  செரிமான சக்தியை அதிகரிக்கிற...

கீரைகளும் அதன் பலன்களும் - 2

Image
 கீரைகளும் அதன் பலன்களும் பொன்னாங்கண்ணி கீரை       பொன்னாங்கண்ணி கீரை நம் இந்தியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு கீரை வகையாகும். இதில் இரண்டு வகை உள்ளது பச்சை நிறத்தில் இருப்பது இந்தியாவில் விளைய கூடியது. சிவப்பு நிறத்தில் உள்ளது சீமை பொன்னாங்கண்ணி என அழைக்கப்படுகிறது. நாட்டு வகை கீரை அதிக நற்குணங்களை உடையது. இதை பொரியல், கூட்டு, மசியல், சூப் என பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம்.       இந்த கீரையை நம் உணவில் சேர்த்து கொள்வதால் சருமம் பொன் போல் மின்னும். இதை தவிர இந்த கீரை அதிக மருத்துவக்குணங்களை உடையது. அவை : 1.உடல் எடை குறைய பொன்னாங்கண்ணி கீரையை நம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கீரையை மிளகுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். 2. பொன்னாங்கண்ணி கீரை உடல் வலிமையை அதிகப்படுத்தும். எலும்புகளை வலுப்படுத்தும். 3. பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போக்க உதவும். 4. இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்வை அளித்து நாம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக  செயல்பட  பயன்படுகிறது.  5. கல்லீரல் மற்றும் மூல நோய்களை குண...

பேரிக்காய்

Image
  பேரிக்காய்            பேரிக்காய் ஒரு மழைப்பருவ பழம். இது ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கிடைக்கும். இது அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டது.  பேரிக்காயின் பலன்கள்  1. பேரிக்காய் அதிக நார்ச்சத்து உடையது. மலச்சிக்கலை சரிசெய்ய உதவுகிறது. 2. பேரிக்காய் குறைந்த கலோரியை கொண்டது. எனவே உடல் பருமன் குறைவதற்கு பயன்படுகிறது. 3. பேரிக்காய் அதிக நீர்ச்சத்தை உடையது, உடலில் நீரேற்றமாக இருக்க உதவுகிறது. 4. இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இதயத்தில் உள்ள இரத்த நாளங்களை பலப்படுத்த உதவுகிறது.  5. கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது. 6. தாமிரச்சத்து நிறைந்தது. தாமிரம் நரம்பு செயல்பாட்டை சீர்படுத்த உதவுகிறது.  7. புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. 8. அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானமாக நேரம் எடுத்து கொள்ளும். எனவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 9.  பொட்டாசியம், வைட்டமின் ஏ, கே, சி ஆகிய சத்துக்கள் உடையது. 10. எளிதில் கிடைக்க கூடிய விலை குறைவான ஒரு ஆரோக்கிய உணவு பேரிக்காய். 

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகள்

Image
 மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகள்            மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிக சிக்கலானது மூளை . மூளை ஒரு மனிதனின் உடலில் அனைத்து  செயல்பாடுகளும்  ஒழுங்காக நடைபெற உதவுகிறது .  ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மூளையின் செயல்பாடுகள் குறையத் துவங்கும். அதனால் ஞாபக மறதி, அல்சைமர் போன்ற நோய்கள் உருவாகும். மேலும் நரம்பு தளர்ச்சி, திக்கு வாய், நடையில் மாற்றம், கவனக்குறைபாடு ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க பின்வரும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். 1. பச்சை காய்கறிகள் :          பச்சை காய்கறிகளான கீரை வகைகள், ப்ரோக்கோலி, போன்றவற்றில் வைட்டமின் - கே, லூட்டின், இரும்புச்சத்து, மற்றும் பீட்டா கரோடின் அதிகம் இருப்பதால் அவை மூளையின் செயல்திறன் குறைபாட்டை சரிசெய்ய உதவுகிறது.  2.  கொழுப்புச்சத்து நிறைந்த மீன் வகைகள்                கொழுப்புச்சத்து நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3 அதிகமா இருப்பதால் அவை பீட்டா - அமைலாய்டு என்னும் புரதத்தின் அளவை மூலையில் சர...

தலைவலியில் இத்தனை வகைகளா? - 2

Image
  தலைவலியில் இத்தனை வகைகளா? - 2               தலைவலி                        இரண்டாம் நிலைத் தலைவலிகள்          இரண்டாம் நிலைத் தலைவலிகள் என்பது நம் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் அறிகுறியாகும். பிரச்சனை என்னவென்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்வதே இந்த வகை தலைவலிகளை குணப்படுத்தும். சைனஸ் தலைவலி           சில நேரங்களில் ஒவ்வாமையின் காரணமாக தலைவலி ஏற்படலாம். சைனஸ் என்பது நம் மூக்குப்பகுதியில் உள்ள சிறிய காற்று பைகள் போன்ற அமைப்பாகும். சில நேரங்களில் இந்த பைகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒவ்வாமையின் காரணமாக வீங்கி அடைத்து கொள்ளும். அதை தான் சைனஸ் இன்பெக்ஷன் என கூறுகிறோம்.           சைனஸ் தலைவலி காலநிலை மாற்றத்தால் ஏற்படலாம். இந்த தலைவலி மூக்குப்பகுதியிலும், நெற்றியிலும் வலி உண்டாகும்.  ஹார்மோன் தலைவலி           பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகும் இந்த தலை...

தலைவலியில் இத்தனை வகைகளா? - 1

Image
தலைவலி           தலைவலி என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். மித வலியிலிருந்து தாங்க முடியாத அளவு வலி என வலியிலும் பல நிலைகள் உண்டு.  ஓருவருக்கு மாதத்திற்கு எத்தனை முறை தலைவலி வருகிறது என்பதைப் பொருத்து,  குறுகிய கால தலைவலி, நாள்பட்ட தலைவலி என வகைப்படுத்தப்படுகிறது. 1.குறுகிய கால தலைவலி :               ஒரு   மாதத்தில் 15 நாட்களுக்கு குறைவாக  அடிக்கடி ஏற்படும் தலைவலி அரை மணி நேரம் தொடங்கி பல மணி நேரத்திற்கு நீடிக்கும். 2. நாள்பட்ட தலைவலி :               ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு மேல்  ஏற்படும் தலைவலி   தொடர்ச்சியாக  இருந்து கொண்டே இருக்கும்.     தலைவலியில் பல வகைகள் உண்டு. முதன்மை வகைகள் பின்வருவன: அதீத பதட்டத்தால் தலைவலி :     அதீத பதட்டத்தால் தலைவலி எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக மனஉளைச்சலினால் ஏற்படுகிறது. இந்த தலைவலி இருந்தால் சோர்வும், தலை முழுவதும் வலியும்  உண்டாகு...

SPICE OF THE WEEK - BAY LEAF

Image
BAY LEAF      Bay leaf is a herb comes from bay laurel family, native to the Mediterranean. It is one of the standard cooking  ingredient in many savory dishes all around the world.      There are different varieties of bay leaf is available. Mediterranean bay leaf, Indian bay leaf, California bay leaf and Indonesian bay leaf. Indian bay leaf has a similar taste of cinnamon where the California bay leaf slightly have mint flavor.  HEALTH BENFITS OF BAY LEAF 1. Inhibit the growth of breast and colorectal cancer cells. 2. Consuming bay leaf tea helps to manage blood glucose levels in diabetes patients 3. Reduces inflammation in the wound area. 4. Bay leaf tea helps to prevent kidney stones 5. Smelling the bay leaf smoke helps to improve memory and reduces anxiety 6. Bay leaf tea helps to treat ulcers 7. Helps to prevent heart diseases 8. Rich in Vitamin A, C, B6 , Iron, Magnesium and Zinc 9. Bay leaf tea helps to improve the quality of sleep 10...

சங்குப்பூ

Image
சங்குப்பூ         சங்குப்பூ  எளிதில் வளரக்கூடிய ஒரு கொடி வகை. முன்பெல்லாம் தெருவோரங்களிலும்,  வேலி படல்களிலும் வளரும். சங்குப்பூ  நீல நிறத்திலும், ஊதா நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படும்.  பொதுவாக நீல நிறத்தில் பூக்கும் பூக்களே அதிகம்.  இந்த பூவானது அதிக மருத்துவ குணங்களை கொண்டது.  நம்  பாரம்பரிய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.      சங்குப்பூவை  கொதிக்கும் நீரில் சேர்த்து தேன் கலந்தும் அல்லது கலக்காமலும் பருகலாம்.  சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்  1.  சங்குப்பூ சாற்றை அருந்துவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். 2. சங்குப்பூ சாறு அருந்துவதால் பதட்டம் மற்றும் மன உளைச்சல் குறையும். 3. சங்குப்பூ சாறு நீரிழிவு நோய்  வராமல் தற்காத்து கொள்ள உதவுகிறது. 4. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கிறது  5. சங்குப்பூ உடலில் உள்ள அதிக நீரையும், உப்பையும் வெளியேற்ற உதவி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 6. சங்குப்பூ சாறு உடலின் வெப்ப நிலையை குறைத்து ...

கீரைகளும் அதன் பலன்களும் மூக்கிரட்டை - 1

Image
கீரைகளும்  அதன் பலன்களும்  மூக்கிரட்டை       நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதே சிறந்த வழியாகும். கீரைகள் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களை உள்ளடிக்கியது. கீரைகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஓன்று தான்  மூக்கிரட்டை.       எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தனித் தன்மையுடன் வளரும்  ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.   1. மூக்கிரட்டை சாப்பிடுவதால் கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் உள்ள நச்சு கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படும். 2....

பதட்டத்தை தணிப்பது எப்படி?

Image
  பதட்டத்தை தணிப்பது எப்படி?      பதட்டம் என்பது மனஉளைச்சலுக்கு நம் உடம்பின் எதிர் வினையாகும். பயம், கவலை, என கலந்த உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கும்.   பதட்டத்தின் அறிகுறிகள்  இதய துடிப்பு அதிகரித்தல்  மூச்சு வாங்குதல்  அமைதியின்மை  கவனக்குறைபாடு       மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எல்லாம்  பொதுவான அறிகுறிகள் ஆகும். ஒவ்வொரு மனிதருக்கும் அறிகுறிகள்  வேறுபடலாம்.  வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு, பீதியடைதல், தூக்கத்தில் கெட்ட கனவு, மற்றும் வலி நிறைந்த எண்ணங்களும் ஏற்படும். பதட்டத்தை தணிக்கும் வழிகள்  1. தினமும் உடற்பயிற்சி செய்தல், குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்தல் உடல்நலனுக்கு மட்டும் அல்லாமல் மன நலத்திற்கும் நன்மை பயக்கும். 2. ஆல்கஹால் அருந்துவதை தவிர்த்தல்  3. புகை பிடிப்பதை நிறுத்துதல்  4. இரவில் நன்றாக உறங்குதல்  5. த்யானம் செய்தல்   6. சரிவிகித உணவை உட்கொள்ளுதல்  7. பதட்டத்தில் இருக்கும் பொழுது ஆழ்ந்த சுவாசத்தை முயற்சிக்க வேண்ட...

FRUIT OF THE SEASON - GUAVA

Image
  FRUIT OF THE SEASON GUAVA     Guava is a tropical fruit cultivated in many tropical and subtropical regions. There are different varieties are available. The fruit is oval in shape with light green color and inside with edible seeds. Guava leaves also edible and used for medical purpose. HEALTH BENEFITS OF GUAVA FRUIT AND GUAVA LEAVES Guava leaves extract helps to reduce blood sugar levels, long- term blood sugar control and insulin resistance. Guava leaves extract helps to reduce LDL cholesterol and increase HDL cholesterol Guava contains high level of potassium and digestive fibre which improves heart health. Guava leaves extract helps to relieve uterine cramps Guava rich in digestive fiber which aids healthy bowel movement and prevent constipation Guava can be used for weight loss as it provide very low calories High in anti-oxidants prevent free radical  from damaging cells thus prevents cancer. Guava is a fantastic source of Vitamin - C which improves imm...

உலக தாய்ப்பால் வாரம் (1-7) ஆகஸ்ட் 2022

Image
உலக தாய்ப்பால்  வாரம்  (1-7) ஆகஸ்ட் 2022 உலக தாய் பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1 முதல் 7 ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது . இதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே ஆகும்.  உலக தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள்  "தாய்ப்பால் கொடுப்போம் வாருங்கள்  அறிவூட்டல் மற்றும் ஆதரவளித்தல்"  தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது.  இவை தாய், குழந்தை இருவரின் நலன் காக்க உதவுகிறது. உலக சுகாதார அமைப்பு குழந்தையின் பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க அறிவுறுத்துகிறது. இரண்டு வயது வரை இணை உணவுகள் உடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்மார்கள் அனைவரும் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் , பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு மருத்துவ பணியாளர்கள் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தை இறப்பை குறைக்கிறது. தாய்ப்பால் தருவதால் பெரும் நன்மைகள்  குழந...

WORLD BREAST FEEDING WEEK - (1-7) AUGUST 2022

Image
 WORLD BREAST FEEDING WEEK (1-7) AUGUST 2022 World Breast feeding week is celebrated every year from 1 to 7 August to encourage breast feeding and improve the health of children around the world.  The theme for 2022 is  " STEP UP FOR BREAST FEEDING   EDUCATE AND SUPPORT"     According to UNICEF, a baby should be breastfed within an hour of birth and this should continue for the first six months of the child’s life.  Breastfeeding plays an important role in managing the burden of malnutrition. Breastfeeding provides food security and reduces inequality in society.       World Breastfeeding Week aims  to highlight the huge benefits that breastfeeding can bring to the health and welfare of babies and benefits to maternal health , focusing on good nutrition, poverty reduction, and food security.      The World Health Organization recommends exclusive breastfeeding for the first 6 months of life, followed by...